குட்கா ஊழல் புகார் 4 அதிகாரி மீதான நடவடிக்கை வாபஸ்
குட்கா ஊழல் புகார் 4 அதிகாரி மீதான நடவடிக்கை வாபஸ்
ADDED : டிச 13, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த, குட்கா ஊழல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட, 27 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டில் சிக்கிய, தற்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., தினகரன், சிவில் சப்ளை சி.ஐ.டி., - ஐ.ஜி., நிர்மல்குமார் ஜோஷி, திருவாரூர் எஸ்.பி., ஜெயகுமார், லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., விமலா ஆகியோர் மீது, துறை ரீதியான விசாரணையும் நடந்தது.
இந்நிலையில், அவர்கள் மீதான மேல் நடவடிக்கையை அரசு கைவிட்டுள்ளது.

