தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/உளவுத்துறை ஐ.ஜி., மீது நடவடிக்கை; தேர்தல் கமிஷனுக்கு பா.ஜ., கோரிக்கை

உளவுத்துறை ஐ.ஜி., மீது நடவடிக்கை; தேர்தல் கமிஷனுக்கு பா.ஜ., கோரிக்கை

உளவுத்துறை ஐ.ஜி., மீது நடவடிக்கை; தேர்தல் கமிஷனுக்கு பா.ஜ., கோரிக்கை


ADDED : ஏப் 13, 2026 09:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 09:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழக உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேல், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேல், தேர்தல் அறிவிப்புக்கு பின், உளவுத்துறை அமைப்பை பயன்படுத்தி, கருத்து கணிப்பு எனக் கூறி, ஆளும்கட்சிக்கு ஆதரவாக, ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை வினியோகித்து, குறிப்பிட்ட கடையில் கொடுத்து, பணமாக்கி கொள்ளுமாறு கூறுகின்றனர்.

அதை, உளவுத்துறை அதிகாரி என்ற முறையில், தேர்தல் கமிஷன் கவனத்திற்கு கொண்டு வர, செந்தில்வேல் முயற்சிக்கவில்லை. இதேபோல் சிறப்பு பிரிவு எஸ்.பி., கார்த்திக், தன் பதவியை வைத்து, ஆளும் கட்சியினருக்கு, அரசியல் தகவல்களை தீவிரமாக பகிர்ந்து வருகிறார்.

சென்னை மாநகராட்சி கமிஷனரான குமரகுருபரன், மாநகராட்சி ஊழியர்கள் வாயிலாக, தி.மு.க., வழங்கும் இலவச பொருட்களை வினியோகிக்க, அனுமதித்து வருகிறார். இந்த மூன்று அதிகாரிகளும் பதவியில் நீடிப்பது, நியாயமான தேர்தலை சீர்குலைக்கும். தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தேர்தல் பணியில் இருந்து, மூவரையும் விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us