sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் சாக்கில் கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க நடவடிக்கை

/

தேர்தல் சாக்கில் கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க நடவடிக்கை

தேர்தல் சாக்கில் கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க நடவடிக்கை

தேர்தல் சாக்கில் கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க நடவடிக்கை

1


ADDED : மார் 21, 2026 07:56 PM

Google News

ADDED : மார் 21, 2026 07:56 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

தேர்தல் நேரத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தவிர்ப்பதற்காக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கல்வராயன்மலை பகுதியில் தங்கி ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்காமல் உள்ளனர். வேட்பாளர் உறுதி செய்யப்பட்டதும் சுவர் விளம்பரம், வேட்பு மனு அளிக்க தொண்டர்கள் படை சூழ ஊர்வலமாக செல்லுதல், கட்சி தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களின் பிரச்சார கூட்டங்கள், அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஓட்டு சேகரித்தல் உள்ளிட்ட பணிகளில் வேட்பாளர்கள் பிஸியாகி விடுவர்.

இது போன்ற நிகழ்வுகளில் தங்களுடன் பயணிக்கும் சொந்த கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி, மது, பைக்கிற்கு பெட்ரோல், செலவுக்கு பணம் ஆகியவற்றை வழங்குவது வழக்கம். இதில், ஒரு சில வேட்பாளர்கள் செலவினை குறைப்பதற்காக மதுபாட்டிலுக்கு பதிலாக சாராயத்தை வழங்குவர். இதற்காக ஒவ்வொரு சட்டசபை தேர்தலின்போதும், கல்வராயன்மலை பகுதியில் வழக்கத்தை விட அதிக அளவில் சாராயம் காய்ச்சப்படும். அங்கு காய்ச்சப்படும் சாராயம் அனைத்து பகுதிகளுக்கும் கடத்தி செல்லப்படும்.

கடந்த 2024ம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு, கல்வராயன்மலை பகுதியில் போலீசார் தொடர் சோதனை மேற்கொண்டு சாராய ஊரலை அழித்து வருகின்றனர்.

தேர்தல் நேரத்தை பயன்படுத்தி சிலர் சாராயம் காய்ச்ச வாய்ப்புள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டால், இத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தடுப்பதிற்காக எஸ்.பி., அரவிந்த் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சுழற்சி முறையில் அங்கேயே தங்கி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 3 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் டி.எஸ்.பி., மேற்பார்வையில், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., உட்பட 12 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாரந்தோறும் ஒரு குழுவினர் கல்வராயன்மலையில் தங்கி, பழைய குற்றவாளிகளின் தற்போதைய நிலை, சாராயம் காய்ச்சப்படுகிறதா, ஊரல் போடப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us