த.வெ.க., மீடியாக்களில் 'ஆக்டிவ்' மக்கள் பிரச்னையில் 'ஆப்சென்ட்'
த.வெ.க., மீடியாக்களில் 'ஆக்டிவ்' மக்கள் பிரச்னையில் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 30, 2025 04:25 AM
திண்டுக்கல்: வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக பிரதான கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., போன்றவை 'பூத்' கமிட்டி தொடங்கி, பல்வேறு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
பா.ஜ., - காங்.,- கம்யூ. - தே.மு.தி.க., உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு தேர்தல் புதிதல்ல. மக்களிடமும் இவர்களுக்கு புதிய அறிமுகம் தேவைப்படாது.
இந்நிலையில், புதிதாக களத்திற்கு வந்துள்ள நடிகர் விஜயின் த.வெ.க.,வில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் ரசிகர்கள், இளம் தலைமுறையினர் தான்.
இவர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். இதர கட்சிகளை விமர்சனம் செய்தல், த.வெ.க.,விற்கு பல்வேறு பிரமோஷன்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் தீவிரம் காட்டுகின்றனர். ஆனால், களத்தில் செயல்பாடுகள் இல்லை. இதற்கு காரணம், போதிய வழிகாட்டுதல் இல்லாததுதான். அதேநேரம் அரசியல் அனுபவம் உள்ளவர்கள் எவரும் கட்சியில் இல்லை.
அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
எங்களுக்கு அரசியல் புதிதுதான். ஆனால், எந்தளவில் களத்தில் பணியாற்ற வேண்டுமென்பது தெரியவில்லை.
கட்சித் தலைமையும் சென்னை, அதன் சுற்றுப் பகுதிகளிலுமே கவனம் செலுத்துகிறது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. உரிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.
தலைமைக்கு இதுபோன்ற விபரங்களை எடுத்துக்கூறி உள்ளோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.