உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 31, 2026 12:11 AM

அ நிறம் | அளவு
சென்னை: நடிகர் அஜித்தின் தாய் மோகினி மணி, 89, நேற்று காலமானார்.
சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்த மோகினி மணி, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
துபாயில் இருந்த அஜித், தாய் மறைந்த செய்தி அறிந்ததும் சென்னை திரும்பினார். மோகினி மணியின் இறுதி சடங்குகள் இன்று நடக்கும் என, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அஜித் தாய் மறைவுக்கு, முதல்வர் விஜய், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க., தலைவர் அன்புமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
