ADDED : ஆக 03, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நடிகர் மதன்பாப், 71, உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை, அடையாறு நேரு நகரில் வசித்து வந்த நடிகரும், நகைச்சுவை பேச்சாளர் மற்றும் சின்னத்திரை தொகுப்பாளருமான, கிருஷ்ணமூர்த்தி என்ற மதன்பாப், புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார்.
திருவல்லிக்கேணியில் பிறந்த இவரது தந்தை சுப்பிரமணியம், சுதந்திர போராட்ட வீரர். தன் தனித்துவமான சிரிப்பால், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மதன்பாப், தமிழில் 1984ம் ஆண்டு வெளியான நீங்கள் கேட்டவை படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, தொடர்ந்து வானமே எல்லை, சிங்கம், எதிர்நீச்சல், உட்பட, 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது மறைவுக்கு, திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதன்பாப்பின் மனைவி சுசிலா. இவருக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

