ADDED : மே 19, 2026 12:49 AM

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளை மனைவி மாலதி, நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திரைப்படத்துறையில் ஸ்டன்ட் மற்றும் காமெடி நடிகராக இருப்பவர் முத்துக்காளை. இவரது மனைவி மாலதி, 47. மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கிருமி நோய் தொற்றால், கடந்த 17 நாட்களாக, மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட நிலையில், சுயநினைவின்றி இருந்தார்.
தன் மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க, முதல்வர் விஜய் உதவ வேண்டும் என, முத்துக்காளை கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி மாலதி இறந்தார். அவரது உடல், இறுதி சடங்கிற்காக, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சங்கம்பட்டி என்ற திருக் கோதையாபுரம் கிராமத்திற்கு, ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது.
