எனது புகைப்படத்தை காட்டி மோசடி: நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை
எனது புகைப்படத்தை காட்டி மோசடி: நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை
ADDED : ஜன 23, 2025 05:51 PM

சென்னை:என்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படைத்தைக் காட்டி ஒரு தயாரிப்பாளரை ஏமாற்றும் முயற்சி நடந்துள்ளது. அவ்வாறு என்னுடைய பெயரையோ, புகைப்படைத்தை காட்டி யாரும் தொடர்பு கொண்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று நடிகர் ராஜ்கிரண் அறிவித்துள்ளார்.
நடிகர் ராஜ்கிரண் சமூகவலைதளத்தில் அறிக்கை:
நான் ஒரு நடிகன் என்பதால்,என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும்,என்னை வைத்து திரைப்படம்இயக்குவதற்காக என்று சிலரும்,என் அபிமானிகள் என்றும்,
என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது,சாதாரணமாக நடக்கும் விசயம்.இம்மாதிரியான புகைப்படங்களைவைத்துக்கொண்டு,
என் சொந்தக்காரர்கள் என்றோ,எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக
இருங்கள்.
'கனடா செல்வம்' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு,என்னை வைத்து படம் தயாரிப்பதெற்கென்று, ஒரு சிபாரிசு மூலம் என்னிடம் வந்து பேசி, என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டுசென்ற ஒரு நபர், அதன் பிறகு என்னை சந்திக்கவுமில்லை.படம் தயாரிக்கவும் இல்லை.இது நடந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிறது. அதே நபர் சமீபத்தில் தளபதி என்ற ஒரு
தயாரிப்பாளர், இயக்குனரிடம்,என்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக்காட்டி, தன் பெயரை 'ஸ்டார்லின்'என்று அறிமுகப்படுத்திக்கொண்டு,ஏதோ ஒரு வகையில் அந்த
தளபதி என்பவரை ஏமாற்றமுயன்றதாக என் காதுக்குசெய்திகள் வருகிறது...என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது.என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன்.
என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு,கதைகள் பல சொல்லி,யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு.
இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

