ADDED : மார் 19, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தலைமறைவாக உள்ள, நடிகர் ரூசோவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை உட்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த, 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' நிறுவனம் சார்பில், அதிக வட்டி தருவதாக, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகியாக இருந்த ஹரீஷ், நடிகர் ரூசோ உள்ளிட்டோரை கைது செய்தனர்.
ரூசோ ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவரது ஜாமினை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இவர், மூன்று நாளில் மோசடி வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ரூசோ தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

