ADDED : ஜன 13, 2026 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, த.வெ.க., தலைவர் விஜயிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது. சிங்கத்தின் வாயில் தானாக போய் மாட்டிக் கொண்ட கதைதான் இது. ஏற்கனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தை சிறப்பாக விசாரித்து வந்தது; நியாயமான விசாரணை நடந்திருக்கும்.
ஆனால், சி.பி.ஐ., விசாரணை என்ற பெயரில், பா.ஜ., தன் கட்டுப்பாட்டில் எடுத்து, விஜயை துன்புறுத்தும் வகையில் டில்லி அழைத்துள்ளது. இது அரசியல் ஒப்பந்தத்திற்கான முயற்சி. தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், டில்லியில் வரும் 18ல் நடக்கிறது. கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக்கூடாது.
இனி, காங்கிரசில் இருப்போர் ஆளாளுக்கு, கூட்டணி குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடாது. மீறினால், கண்டிப்பாக நடவடிக்கை உண்டு. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும். ஆட்சியில் பங்கு இல்லை என்பது, அமைச்சர் பெரிய சாமியின் தனிப்பட்ட கருத்து. அவரது கருத்துக் குறித்து, எங்களுக்கு எந்த கருத்தும் கிடையாது.
தொகுதி பங்கீடு குறித்து, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் தலைமையிலான குழு, மீண்டும் தி.மு.க., தலைமையை சந்தித்து பேசும்.
- செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்.,

