ADDED : ஏப் 14, 2025 05:45 AM

சென்னை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க., தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துஉள்ளார்.
பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி திரவு பதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ஓவைசி கட்சி, அகில இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை அடுத்து, தி.மு.க., சார்பில் கட்சியின் துணை பொதுச்செயலர் ராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன.
இந்நிலையில், வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக த.வெ.க., தலைவர் விஜயும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஉள்ளார்.
இந்த மனுவும், நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிகிறது.
இதற்கிடையே, தங்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.