ADDED : அக் 01, 2025 05:50 AM

கரூர் துயரச் சம்பவம் குறித்து, த.வெ.க., தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில், தன் தரப்பு தவறுகளை கூறாமல், அரசு நிர்வாகத்தின் மீது பழிசுமத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார். 41 பேர் உயிரிழந்த நிலையில் போடப்பட்ட வழக்கைக் கூட, தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் பழிவாங்கு வதற்கான மாநில அரசின் சதி என்கிறார்.
தன் கட்சி தொண்டர்களை துாண்டிவிடும் விதமாகவே, அவரது பேச்சு அமைந்துள்ளது. இதுபோன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில், தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில், விஜய் வெளியிட்டுள்ள வீடியோ எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
எனவே, விஜயின் அரசியல் பயணம் குறித்து, தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- சண்முகம்
மாநில செயலர், மா.கம்யூ.,