ADDED : நவ 14, 2024 09:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் நடிகர்களை நாடாள விட்டதால், மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தையும், விஜயின் அரசியல் வருகையையும் கொங்கு இளைஞர் பேரவை நிராகரிக்கிறது.
விஜய் மட்டுமல்ல அஜித், கமல், ரஜினியை மக்கள் ஏற்கக்கூடாது. வரும் சட்டசபை தேர்தலில் விஜயை மக்கள் தண்டிப்பர்; நிராகரிப்பர். அதன்பின், அவர் அரசியலில் இருந்து பின்வாங்குவார்.
தமிழக மக்கள் விஜயை ஏற்கக்கூடாது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து சலசலப்பு ஏற்படுத்துகின்றனர். ஆனால், அவர்களை அடையாளம் காணும் அளவுக்கு மக்கள் இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை.
-- தனியரசு,
தலைவர், கொங்கு இளைஞர் பேரவை.