நடிகை கவுதமிக்கு முக்கிய பதவி தந்த இ.பி.எஸ்.! தடா பெரியசாமிக்கும் புதிய பொறுப்பு
நடிகை கவுதமிக்கு முக்கிய பதவி தந்த இ.பி.எஸ்.! தடா பெரியசாமிக்கும் புதிய பொறுப்பு
ADDED : அக் 21, 2024 04:07 PM

சென்னை: நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க.,வில் புதிய பொறுப்பை வழங்கி இ.பி.எஸ்., அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பா.ஜ.,வில் இருந்தவர் நடிகை கவுதமி. பல ஆண்டுகாலம் அக்கட்சியில் இருந்த அவர், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அங்கு தங்கி தேர்தல் வேலைகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் 2021ம் ஆண்டு தேர்தலில் நடிகை கவுதமிக்கு சீட் கிடைக்கவில்லை. பின்னர் சொந்த பிரச்னை காரணமாக பா.ஜ.,வில் இருந்து அவர் விலகினார். பின்னர் கடந்த பிப்ரவரியில் இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
இவரை போன்று பா.ஜ.,வில் இருந்த தடா பெரியசாமியும் அக்கட்சியில் இருந்து விலகி, தம்மை அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டார். இந் நிலையில் இவர்கள் இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகளை அளித்து, இ.பி.எஸ்., அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி நடிகை கவுதமிக்கு கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. தடா பெரியசாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர்கள் இருவர் தவிர, சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலி, கழக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

