தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நடிகை தமன்னா வழக்கு தள்ளுபடி

 நடிகை தமன்னா வழக்கு தள்ளுபடி

 நடிகை தமன்னா வழக்கு தள்ளுபடி


ADDED : ஏப் 17, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நடிகை தமன்னா, 'பவர் சோப்' நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'பவர் சோப்' நிறுவனத்தின் தயாரிப்புகளை, ஓராண்டுக்கு விளம்பரப்படுத்த, கடந்த 2008ல், நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஒப்பந்த காலம் முடிந்த பின்னும், 2010- - 2011 காலகட்டத்தில் தமன்னாவின் புகைப்படங்களை நிறுவன விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமன்னா வழக்கு தொடர்ந்தார்.

பவர் சோப் நிறுவனம், 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமன்னா தாக்கல் செய்த ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை எனக் கூறி, கடந்த 2017ல் வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, நடிகை தமன்னா மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கோவிந்தராஜன் திலகவதி அடங்கிய அமர்வு, 'தனி நீதிபதி உத்தரவு சரிதான்' என கூறி, மேல்முறையீட்டு வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us