உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 14, 2024 02:07 AM
அ நிறம் | அளவு
சென்னை, :பாட்னாவில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பீஹார் மாநிலம் பாட்னாவில் இருந்து வரும் 15, 22, 29ம் தேதிகளில் இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னை பெரம்பூர் வழியாக சென்று, அடுத்த நான்காவது நாள் காலை 7:00 மணிக்கு கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்ட்ரலை சென்றடையும்
மங்களூரு சென்ட்ரலில் இருந்து வரும் 18, 25, ஜூலை 2ம் தேதிகளில் இரவு 8:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னை பெரம்பூர் வழியாக சென்று, அடுத்த நான்காவது நாள் காலை 5:30 மணிக்கு பாட்னாவுக்கு சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
