உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 12, 2026 04:16 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் பதிவுத்துறையை நிர்வகிக்க, தலைவர் மற்றும் நான்கு கூடுதல் ஐ.ஜி.,க்கள் உள்ளனர். ஐ.ஜி., பதவிக்கு, ஐ .ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
பதிவுத்துறையில் டி.ஐ.ஜி.,யாக இருப்பவர்களில், பணி மூப்பு அடிப்படையில் தகுதி பெறும் நபர்கள், கூடுதல் ஐ.ஜி.,க்களாக நியமிக்கப்படுவர். இதன்படி, தற்போது சுதா மால்யா, ஜனார்த்தனன் ஆகியோர், கூடுதல் ஐ.ஜி.,க்களாக இருந்து வருகின்றனர்.
காலியாக உள்ள இரண்டு கூடுதல் ஐ.ஜி., பணியிடங்களுக்கு, அருள்சாமி, பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் அருள்சாமி, வழிகாட்டி மதிப்புக்கான கூடுதல் ஐ.ஜி.,யாகவும், பத்திரப்பதிவு பணிகளுக்கு, பிரபாகர் கூடுதல் ஐ.ஜி.,யாகவும் இருப்பர் என, அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
