தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 8 விரைவு ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள்

8 விரைவு ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள்

8 விரைவு ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள்


ADDED : அக் 02, 2024 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை சென்ட்ரல் - திருப்பதி உட்பட எட்டு விரைவு ரயில்களில், தலா இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்ட்ரல் - திருப்பதி, திருப்பதி - சென்ட்ரல் விரைவு ரயில்களில், இன்று முதல் 15ம் தேதி வரை, ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஒரு இருக்கை வசதி முன்பதிவு பெட்டி, கூடுதலாக இணைத்து இயக்கப்படும்

கோவை - திருப்பதி விரைவு ரயிலில், நாளை முதல் 15ம் தேதி வரையிலும், திருப்பதி - கோவை விரைவு ரயிலில் நாளை முதல் 16ம் தேதி வரையிலும் ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஒரு இருக்கை வசதி உடைய முன்பதிவு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படும்

திருப்பதி - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு விரைவு ரயிலில், வரும் 4 முதல் 15ம் தேதி வரையிலும், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - திருப்பதி விரைவு ரயிலில், வரும் 5 முதல் 16ம் தேதி வரையிலும், ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஒரு இருக்கை வசதியுள்ள முன்பதிவு பெட்டியும் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us