தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


ADDED : ஆக 29, 2025 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பயணியர் தேவையை கருத்தில் வைத்து, ஐந்து விரைவு ரயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

 ஆந்திர மாநிலம் திருப்பதி - மன்னார்குடி விரைவு ரயிலில் இரு மார்க்கத்திலும், வரும் செப்., 4 முதல், ஒரு இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து, இயக்கப்படும்

 உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில், வரும் 31ம் தேதி இரண்டு 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

தற்காலிக கூடுதல் பெட்டிகள்  தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலில், இன்று முதல் அக்., 31 வரை, 2ம் வகுப்பு 'ஏசி'யில் - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி' - 2, மூன்று ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது

 சென்ட்ரல் - கேரள மாநிலம் திருவனந்தபுரம் விரைவு ரயில், வரும் 31 முதல் நவ., 2 வரை; சென்ட்ரல் - கேரள மாநிலம் ஆலப்புழா விரைவு ரயில், இன்று முதல் அக்., 31 வரை, ஒரு இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது

 கோவை - ராமேஸ்வரம் விரைவு ரயில், செப்., 2 முதல் அக்., 28 வரை, ஒரு 'ஸ்லீப்பர்' பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us