ADDED : பிப் 08, 2024 09:56 PM
சென்னை:லோக்சபா தேர்தலை யொட்டி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இணை தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
லோக்சபா தேர்தல் பணிக்காக, கூடுதல் அலுவலர்களை நியமிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில், தலைமை தேர்தல் கமிஷனருக்கு உதவி செய்ய, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகராட்சி சுகாதார பிரிவு கூடுதல் கமிஷனராகப் பணியாற்றி வந்த சங்கர்லால் குமாவத், தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கூடுதல் கலெக்டராக பணிபுரிந்த ஸ்ரீகாந்த், தகவல் தொழில்நுட்ப பணிகளை கவனிப்பதற்காக, இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், தேர்தல் விழிப்புணர்வு பணிக்காக, இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்து உள்ளார்.

