ADDED : ஜூன் 16, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதலை தொடர்ந்து, அன்புமணி ஆதரவாளர்களை, மாநில, மாவட்ட பதவிகளில் இருந்து ராமதாஸ் நீக்கி வருகிறார்.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு, ஏற்கனவே இருந்த ஆறு போலீசாருடன், கூடுதலாக ஐவர் நியமிக்கப்பட்டு, மொத்தம் 11 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தைலாபுரம் தோட்டத்தில், ராமதாசை சந்திக்க வருவோர், பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
யாரையும் எளிதாக நம்பி, வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என, ராமதாசுக்கு மாநில நிர்வாகி ஒருவர் அறிவுரை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -