UPDATED : செப் 05, 2025 02:18 AM
ADDED : செப் 05, 2025 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்கா, பாகிஸ்தானுடன் உறவு வைத்துள்ளது. இதனால், பாகிஸ்தானை திருப்திபடுத்த, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் எந்தளவிற்கு தொழில் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அந்த வெள்ளை அறிக்கை கிடைத்தால் தான், தற்போதைய தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தொழில் முதலீடுகளோடு ஒப்பிட்டு பார்க்க முடியும்.
கச்சத்தீவை தாரைவார்த்து விட்டனர் என த.வெ.க., தலைவர் விஜய் மேடையில் பேசுவதற்கு முன், என்ன காரணத்திற்காக இலங்கையிடம் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது என்பது குறித்து படித்து தெரிந்திருக்க வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், நாய் தொல்லை தொடருகிறது.
- கார்த்தி, காங்., - எம்.பி.,