ADDED : அக் 30, 2025 10:50 PM
சென்னை:  சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள, இன்று கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத் துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அதற்கான பத்திரங்களை முகூர்த்த நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர்.
இதை கருத்தில் வைத்து, முகூர்த்த நாட்களில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் எண்ணிக்கையில், 'டோக்கன்' வழங்க அனுமதிக்கப் படுகிறது.
இந்த வகையில் முகூர்த்த நாளான இன்று, சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை அனுமதிக்க, பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
வழக்கமாக ஒரு நாளைக்கு, 100 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில் இன்று, 150 டோக்கன்கள் அனுமதிக்கப்படும்.
இதேபோன்று ஒரு நாளைக்கு, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், இன்று, 300 டோக்கன்கள் வரை அனுமதிக்கப்படும்.

