ADDED : டிச 03, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாள் என்பதால், நாளை, பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
வளர்பிறை சுபமுகூர்த்த நாட்களில், பத்திரங்கள் பதிவு செய்ய அதிகமானோர் விரும்புகின்றனர்.
நாளை, கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினம் என்பதால், சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகத்தில், 300 டோக்கன்கள் வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.