தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பொறாமையில் துடிக்கிறார் ஸ்டாலின் மீது ஆதவ் விமர்சனம்

பொறாமையில் துடிக்கிறார் ஸ்டாலின் மீது ஆதவ் விமர்சனம்

பொறாமையில் துடிக்கிறார் ஸ்டாலின் மீது ஆதவ் விமர்சனம்


UPDATED : அக் 16, 2026 09:21 PM

ADDED : அக் 16, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 09:21 PM ADDED : அக் 16, 2026 09:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ‘தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொறாமையில் துடிக்கிறார்’ என, த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில், தனி மனிதரின் சிந்தனையும் உழைப்பும் ஒருபோதும் கிடையாது. அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை, மக்களின் தேவைகளை தீர்க்க, வரிப்பணத்தில், ஆட்சியில் இருப்பவர்கள் திட்டங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைக்கு கொண்டு வருவர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அடுத்து வரும் அரசு, அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி, நடைமுறைக்கு கொண்டு வருவதில், என்ன பிழை இருக்க முடியும்?

கடந்த 2016 – 2021ல், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை, தி.மு.க., அரசின் முதல்வராக இருந்த ஸ்டாலின் திறந்து வைத்தார்; அமைச்சர்களும் திறந்து வைத்தனர். அவற்றை, தாங்களே சிந்தித்து செயல்படுத்தியதை போல விளம்பரமும் செய்தனர்.

த.வெ.க., அரசும், முந்தைய அரசுகள் கொண்டு வந்த திட்டங்களில், மக்கள் நலனுக்கானவற்றை தொடர்கிறது. குறைபாடுள்ள திட்டங்களை மேம்படுத்தி செயல்படுத்துகிறது. அதன்படி, கோவையில், அறிவுலகம் நுாலகத்தை, முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

ஆனால், அடிப்படை புரிதலே இல்லாமல், அதை, தானே சிந்தித்து, தான் ஒருவரே வடிவமைத்து, கட்டமைத்து செயல்படுத்தியதுபோல தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். பொறாமையில் துடித்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us