sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆதிதிராவிடர் விடுதி மாணவருக்கு உணவுக் கட்டணம் வழங்க தாமதம்; காப்பாளர் சிரமத்தை அரசு போக்குமா

/

ஆதிதிராவிடர் விடுதி மாணவருக்கு உணவுக் கட்டணம் வழங்க தாமதம்; காப்பாளர் சிரமத்தை அரசு போக்குமா

ஆதிதிராவிடர் விடுதி மாணவருக்கு உணவுக் கட்டணம் வழங்க தாமதம்; காப்பாளர் சிரமத்தை அரசு போக்குமா

ஆதிதிராவிடர் விடுதி மாணவருக்கு உணவுக் கட்டணம் வழங்க தாமதம்; காப்பாளர் சிரமத்தை அரசு போக்குமா


ADDED : நவ 30, 2024 05:24 AM

Google News

ADDED : நவ 30, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர்களுக்கான உணவு கட்டணத்தை விடுவிப்பதில் தாமதமாவதால், காப்பாளர்கள் மனம் வெதும்புகின்றனர்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் 1331 பள்ளி, கல்லுாரி, தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் விடுதிகள் உள்ளன. இங்கு தங்கும் பள்ளி மாணவருக்கு ஒரு மாத உணவு கட்டணம் ரூ.1400. கல்லுாரி மாணவருக்கு ரூ.1500. இதனை அரசே வழங்குகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரிசியை மானிய விலையிலும், பிற பொருட்கள் கூட்டுறவு கடைகள் மூலமும் வழங்கப்படுகிறது. இந்தக் கல்வி ஆண்டு ஜூனில் துவங்கியது. விடுதி வசதி கேட்ட அனைவரையும் சேர்க்க இயக்குனர் அலுவலகத்தில் அறிவுறுத்தினர்.

ஆகஸ்டில் 'நல்லோசை' செயலியில் விடுதி மாணவர்களின் விவரத்தை பதிவேற்றம் செய்யும்போது, தொழில்நுட்ப கோளாறால் தாமதம் ஏற்பட்டது.

இந்தாண்டுக்கான உணவுக் கட்டணத்தை அனுமதித்த போது, நல்லோசை செயலியில் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டும் உணவுக் கட்டணத்தை இயக்குனர் அலுவலகம் விடுவித்தது. புதிதாக தேர்வான 22 ஆயிரம் மாணவர்களுக்கான 6 மாத உணவுக் கட்டணத்தை விடுவிக்காமல் உள்ளனர். இதனால் விடுதி காப்பாளர்கள் சொந்த பணத்தில் மேற்படி செலவுகளை செய்து சிரமப்படுகின்றனர்.

ஒரு விடுதி காப்பாளர் உணவுக் கட்டணத்தை பணமாக்க பட்டியல் தயாரித்து, தாசில்தார் ஒப்புதல் பெற்று, மாவட்ட அலுவலக கண்காணிப்பாளரிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அந்த பட்டியலை கருவூலத்தில் பணமாக்கி வரவேண்டும். இதற்காக அலுவலகங்களுக்கு சென்று வர செலவாகும் தொகை அதிகம் என்பதால், நிலுவைத் தொகை வந்த பின், வழக்கமான ஒதுக்கீடையும் பெறலாம் என காத்திருக்கின்றனர்.

அதேசமயம் விடுதிகளுக்கு இணையகட்டணம், பத்திரிகைகள், நல்லோசை செயலியை செயல்படுத்த 'அவுட்சோர்ஸிங்' மூலம் நியமித்துள்ள ஊழியர்கள் என ரூ. பல லட்சம் செலவு இத்துறையால் செய்யப்படுகிறது. ஒருபுறம் விடுதியை வெள்ளையடிப்பதும், மற்றொரு புறம் கட்டடங்களை இடித்துவிட்டு, தாட்கோ மூலம் கட்டப்படுவதும் நடக்கிறது.

ஆனால் மாணவர்களுக்கான செலவுத் தொகையை மட்டும் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.

அரசுதான் கவனிக்க வேண்டும் என மனம் வெதும்புகின்றனர் காப்பாளர்கள்.






      Dinamalar
      Follow us