sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலித் இயக்க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் பாட்டில் "வீச்சு' : குடும்பத்தோடு கொல்ல முயற்சி

/

தலித் இயக்க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் பாட்டில் "வீச்சு' : குடும்பத்தோடு கொல்ல முயற்சி

தலித் இயக்க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் பாட்டில் "வீச்சு' : குடும்பத்தோடு கொல்ல முயற்சி

தலித் இயக்க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் பாட்டில் "வீச்சு' : குடும்பத்தோடு கொல்ல முயற்சி


ADDED : ஜூலை 23, 2011 12:16 AM

Google News

ADDED : ஜூலை 23, 2011 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடியில் அம்பேத்கர் திருக்குலப்பேரவை பொதுச் செயலர் வீட்டில், நேற்று அதிகாலை பெட்ரோல் பாட்டில்களை வீசி குடும்பத்தோடு கொல்ல முயற்சி நடந்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நேரு நகரில் வசிப்பவர் ராஜமாணிக்கம். இவர், கோவிலூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருகுலப்பேரவையில் பொதுச் செயலராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். மாடியில் இவரது மகன்கள் படுத்திருந்தனர். நேற்று அதிகாலை 1.40 மணிக்கு இவர் படுத்திருந்த படுக்கை அறையின் ஜன்னல் பகுதியில் 'டமார்', 'டமார்' என வெடி வெடிப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. பதட்டத்துடன் எழுந்த அவர், மனைவி அன்பரசியுடன் வீட்டு முன்பக்க கதவை திறந்துள்ளார். அப்போது, ஜன்னல் கண்ணாடி சேதமடைந்து, திரை (ஸ்கிரீன்) தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அருகில், போர்டிகோவில் நிறுத்தியிருந்த இரு பைக்குகளை அவசரமாக அப்புறப்படுத்தியதோடு, தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். சேதமடைந்த ஜன்னல் அருகே பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்த இரண்டு பாட்டில்கள் உடைந்து சிதறி கிடந்தன. இதுகுறித்து வடக்கு போலீசில் ராஜமாணிக்கம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன், எஸ்.ஐ., ராமர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



ராஜமாணிக்கம் கூறுகையில், 'காரைக்குடி அருகே கோவிலூரில் டாக்டர் அம்பேத்கர் திருக்குலப்பேரவைக்கு சொந்தமான அலுவலக கட்டடம் உள்ளது. தற்போது கல்வி நிறுவனத்திற்காக வாடகைக்கு விட்டுள்ளோம். இதை அபகரிக்கும் நோக்கில், சிலர் மறைமுக வேலைகளில் ஈடுபடுவதோடு,பேரவை பெயரையும் தவறுலாக பயன்படுத்தி வந்தனர். இதை தட்டிக்கேட்ட என்னை, பெட்ரோல் பாட்டில் வீசி கொல்ல முயற்சி செய்துள்ளனர்' என்றார்.








      Dinamalar
      Follow us