UPDATED : செப் 05, 2011 06:38 AM
ADDED : செப் 02, 2011 11:39 PM

சேலம்:அரசு 'கேபிள் டிவி' துவங்கப்பட்டுள்ளதற்கு, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
சேலம் வந்த அவர், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, திருச்சி துணை மேயர் அன்பழகன், திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் நடேசன் ஆகியோரைக் காண்பதற்காக, மதியம் 12.40 மணிக்கு, சேலம் மத்திய சிறைக்கு வந்தார்.அவர்களைச் சந்தித்த பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., வினர் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டது.
இது, மேலும் தொடரப் போகிறது. ஒவ்வொரு சிறைச்சாலையாகச் சென்று பார்வையிடும் பணியை, ஜெயலலிதா வழங்கியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., வை சமாளிக்கவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., வின் வெற்றி வாய்ப்பு பாதிக்காது. அது, தி.மு.க., வின் வெற்றிக்கு வழி வகுக்கும். தமிழகத்தில் அரசு 'கேபிள் டிவி' துவங்கியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?பதில்: அ.தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதிகளில் காணப்பட்ட அரசு 'கேபிள் டிவி' துவக்கம் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதற்கு என் பாராட்டுதல்கள். உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., வின் கூட்டணி குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவு செய்வார்.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.