sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., அரசைக் கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க., டிச.,3ல் உண்ணாவிரதப் போராட்டம்

/

தி.மு.க., அரசைக் கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க., டிச.,3ல் உண்ணாவிரதப் போராட்டம்

தி.மு.க., அரசைக் கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க., டிச.,3ல் உண்ணாவிரதப் போராட்டம்

தி.மு.க., அரசைக் கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க., டிச.,3ல் உண்ணாவிரதப் போராட்டம்


ADDED : நவ 29, 2024 02:32 PM

Google News

ADDED : நவ 29, 2024 02:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க., அரசைக் கண்டித்து வரும் டிச.,3ம் தேதி அ.தி.மு.க., சார்பில் திருப்பூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் விடியா தி.மு.க., அரசு, ஆட்சிக்கு வந்த உடனேயே சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டணம் உயர்வு, குப்பை வரி விதித்தல் என்று பல்வேறு கட்டண உயர்வுகளை தமிழக மக்களின் தலையில் சுமத்தியதைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், சர்வாதிகார ஸ்டாலினின் தி.மு.க., அரசு, இனி ஆண்டுதோறும்6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்பதுடன், சொத்து வரி உயர்த்தப்படும்போதெல்லாம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு மற்றும் ஏனைய மறைமுக வரி உயர்வுகளையும் அறிவித்து, அதன்படி மூன்றாண்டுகளில் இரண்டாம் முறையாக கடுமையாக உயர்த்தப்பட்ட வரி உயர்வு இந்த ஆண்டு முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எந்தவித எதிர்ப்பையும் கண்டுகொள்ளாத மக்கள் விரோத தி.மு.க., அரசு பல்வேறு வரி உயர்வுகள் தவிர, அனைத்து விதமான பதிவுக் கட்டணங்கள் மற்றும் அரசு கட்டணங்கள் பல மடங்கு உயர்வு, பால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, மூன்று முறை மின்கட்டண உயர்வு என்று பல்வேறு வரிச் சுமைகளையும், கட்டண உயர்வுகளையும் தமிழக மக்களின் தலையில் சுமத்தி வருகிறது.

இதுதவிர, நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க., அரசு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தொழில் வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும், அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வாடகைக் கட்டடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கான வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதித்துள்ளது.

இவ்வாறு தமிழக மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள, மிகமிகக் கடுமையாக உயர்த்தப்பட்ட அனைத்து உள்ளாட்சி வரி மற்றும் கட்டணங்களையும், வணிக நிறுவனங்களுக்கான வாடகைக்கு 18 சதவீத 051-வரியையும், பலமடங்கு தொழில்வரி உயர்வையும் ரத்து செய்யும் தீர்மானத்தை, திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கழகக் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை, விடியா தி.மு.க., அரசின் மேயர் ஏற்காமல், தொடர்ந்து கூட்டத்தை நடத்தி உரிய விவாதங்கள் இன்றி அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக “ஆல்பாஸ்” என்று கூறியதாகவும், இச்செயலைக் கண்டித்து மாமன்றக் கூட்ட அரங்கில் அ.தி.மு.க., மாமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து, தலையில் துண்டை போட்டுக்கொண்டு தர்ணா போராட்டம் நடத்தி உள்ளனர்.

இதனைக் கண்ட மாநகராட்சி மேயர் மற்றும் நிர்வாகம் உடனடியாக மாமன்றத்தில் கூட்டம் முடிவடைந்தது எனக் கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறி உள்ளனர். தொடர்ந்து, அ.தி.மு.க., மாமன்ற உறுப்பினர்கள், மக்கள் விரோத ஸ்டாலினின் திமுக அரசையும், திருப்பூர் மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 16 மாமன்ற உறுப்பினர்களை, விடியா தி.மு.க., அரசின் காவல் துறை கைது செய்ததைக் கண்டித்து வெளியிடப்பட்ட எனது கண்டன அறிக்கையினை அடுத்து மாமன்ற உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஸ்டாலினின் மக்கள் விரோத தி.மு.க., அரசையும், திருப்பூர் மாநகராட்சியின் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து, திருப்பூர் மாநகராட்சியின் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் டிச.,3ம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us