ADDED : பிப் 15, 2024 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பா.ஜ., ஆதரவு அமைப்பான, முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச், தமிழக தலைவர் பாத்திமா அலி, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிவுக்கு பின், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 14 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., நிர்வாகிகளை, அ.தி.மு.க., இழுத்து வருகிறது.
பா.ஜ.,விலிருந்து விலகிய நடிகை கவுதமி, நேற்று முன்தினம் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
அதேபோல், பா.ஜ., ஆதரவு அமைப்பான முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச், தமிழக தலைவர் பாத்திமா அலி, அப்பொறுப்பிலிருந்து விலகி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.
இது, பா.ஜ.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.