அ.தி.மு.க., பிளக்ஸ் விழுந்து தஞ்சை இளைஞர் படுகாயம்
அ.தி.மு.க., பிளக்ஸ் விழுந்து தஞ்சை இளைஞர் படுகாயம்
ADDED : ஜன 29, 2024 12:11 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வந்தார். அவரை வரவேற்கும் விதமாக சாலையோரங்களில், ஆயிரக்கணக்கான பிளக்ஸ் பேனர்களும், பெரிய இரும்புக்கம்பிகளில் கொடிகளும் நடப்பட்டிருந்தன.
புலவன்காடு கிராமத்தை சேர்ந்த கபில்தேவ், 43, சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில், பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் மாலை டூ-வீலரில் சென்று கொண்டிருந்தபோது, பொய்யுண்டார்குடிக்காடு பிரிவு சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய பிளக்ஸ் பேனர் திடீரென சரிந்து கபில்தேவ் மீது விழுந்தது. அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்ப இருந்த நிலையில், பிளக்ஸ் விழுந்து கபில்தேவ் காயமடைந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.