ADDED : ஆக 19, 2025 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அக்னிவீர் திட்டத்தின்படி, இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம், வரும் 25ம் தேதி, ஈரோட்டில் துவங்க உள்ளது.
'அக்னிவீர் ஜெனரல் டூட்டி' எனும் பொதுப் பணிகளுக்கு, வரும் 25ம் தேதியும், தொழில்நுட்ப பிரிவுக்கு, 26ம் தேதி முதல் செப்., 2ம் தேதி வரையும் ஆள் தேர்வு நடக்க உள்ளது.
அதைத் தொடர்ந்து, செப்., 3, 4ம் தேதிகளில், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆள் தேர்வு முகாம் நடக்க உள்ளது. பின், செப்., 5ம் தேதி, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, 6, 7ம் தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதற்கு விண்ணப்பித்தோருக்கு, தனித்தனியாக, முகாமில் பங்கேற்பதற்கான தேதி குறித்த விபரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.