தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அ.தி.மு.க., - பா.ஜ., புறக்கணிப்பு

 அ.தி.மு.க., - பா.ஜ., புறக்கணிப்பு

 அ.தி.மு.க., - பா.ஜ., புறக்கணிப்பு


ADDED : பிப் 21, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., அரசு, கடந்த 2021 மே மாதம் ஆட்சி பொறுப்பேற்றது. தமிழகத்தின் 16வது சட்டசபையின் முதல்வராக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி பதவியேற்றனர்.

தி.மு.க., ஆட்சி முடிவுறும் நிலையில், வரும் ஏப்ரலில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, தமிழக சட்டசபையில், கடந்த 17ம் தேதி இடைக்கால பட்ஜெட், இடைக்கால வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றின் மீதான விவாதம் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது.

சட்டசபை கடைசி நாளான நேற்று, விவாதத்திற்கு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் அளித்தனர். கடைசி நாள் கூட்டத்தை, அ.தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர்.

அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ., அய்யப்பன் ஆகியோர் சபைக்கு வந்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us