ADDED : செப் 28, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, போகும் இடங்களிலெல்லாம் தி.மு.க.,வையும், தமிழக அரசையும் குற்றஞ்சாட்டிப் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஆனால், அவர் கட்சியில் இருக்கும் ஓட்டை உடைசல் குறித்து அவர் ஒரு நாளும் பேசுவதுமில்லை; கவலைப்படுவதும் இல்லை. அவர் தி.மு.க., கூட்டணி சரிவில் இருப்பதாக கனவு காண்கிறார்.
அந்தக் கனவு பலிக்கவே பலிக்காது. அவர் கனவு காணுவது போலவே, அவர் கூட்டணி சேர்ந்திருக்கும் பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தவரும் ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொண்டு செய்பவர்களும் அதையே விரும்புகின்றனர். அவர்கள் நினைப்புக்கு மாறாக, தி.மு.க., கூட்டணி இன்று வரை வலுவாக உள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலிலும் தி.மு.க., கூட்டணியே வெற்றி பெறும்.
- திருமாவளவன், தலைவர், வி.சி.,