உள்ளடக்கத்திற்கு செல்ல

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா சரியானதல்ல
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா சரியானதல்ல
ADDED : ஜூன் 30, 2026 08:42 AM

அ நிறம் | அளவு
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்வது, தமிழக அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல; ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவு அளித்து இருக்கிறோம். அது ஐந்தாண்டுகள் தொடர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
வி.சி.க., அமைச்சரின் இலாகாவை மாற்றித்தர வேண்டும் என்றோ, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றோ, த.வெ.க.,வுக்கு எந்த ஒரு அழுத்தமும் நாங்கள் தரவில்லை. அமைச்சர் சரத்குமார், கிரிக்கெட் மைதானத்தில் போதை மருந்து பயன்படுத்தியது உண்மை எனில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருமாவளவன், தலைவர், வி.சி.க.,
