உள்ளடக்கத்திற்கு செல்ல

அந்தமானுக்கு ஒரு நீதி கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?
அந்தமானுக்கு ஒரு நீதி கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?
ADDED : ஜூன் 30, 2026 08:42 AM

அ நிறம் | அளவு
சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காக, அந்தமான் நிக்கோபார் தீவுகளில், 'நிக்கோபார் வளர்ச்சி திட்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை செயல்படுத்தினால், அவ்வழியாகத் தான் கப்பல் போக்குவரத்து நடக்கும். அதனால், இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பும், நன்மையும் ஏற்படும். ஆனால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அதை எதிர்க்கிறார்.
அவரை பார்த்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் என, கர்நாடக காங்., அரசு துடித்து கொண்டிருக்கிறது. அதற்காக, 12,500 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கவும் திட்டமிட்டுள்ளது.
'அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவிற்கு ஒரு நீதியா?' கர்நாடகாவில் 12,500 ஏக்கர் காடுகளை அழித்தால், காட்டில் வாழும் புலிகள், யானைகள் போன்ற வன விலங்குகளும், பறவைகளும் என்ன செய்யும்?
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,
