2026 தேர்தலிலும் அதிமுக., - தேமுதிக,. கூட்டணி தொடரும்: பிரேமலதா பேட்டி
2026 தேர்தலிலும் அதிமுக., - தேமுதிக,. கூட்டணி தொடரும்: பிரேமலதா பேட்டி
UPDATED : மார் 20, 2024 05:51 PM
ADDED : மார் 20, 2024 05:26 PM

சென்னை: அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.   மத்திய சென்னை, திருவள்ளூர் (தனி), விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. பிறகு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றார்.
லோக்சபா தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்த அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தே.மு.தி.க.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இன்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்தார். அவரை,  தே.மு.தி.க.,வின் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.
இந்நிலையில்  இன்று( மார்ச் 20) மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகத்தில் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இபிஎஸ்., -ம், பிரேமலதாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். தே.மு.தி.க.,வுக்கு திருவள்ளூர்( தனி) , மத்திய சென்னை, கடலூர்,தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
விஜயகாந்த் மகன் விருப்ப மனு
 
தே.மு.திக., சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

