ADDED : ஜூலை 07, 2025 01:14 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம், அ.தி.மு.க., ஆட்சியில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மருத்துவமனையை கடந்த பிப்., 23ல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தற்போது, அங்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வுக்கு சென்றபோது, மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் பணியில் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மேல்விஷாரம் மருத்துவமனையில், ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து மேல்விஷாரத்தில், வரும் 10ம் தேதி, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.