sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., அரசைக் கண்டித்து 27ம் தேதி அ.தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

/

தி.மு.க., அரசைக் கண்டித்து 27ம் தேதி அ.தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

தி.மு.க., அரசைக் கண்டித்து 27ம் தேதி அ.தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

தி.மு.க., அரசைக் கண்டித்து 27ம் தேதி அ.தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

1


ADDED : டிச 26, 2024 02:16 PM

Google News

ADDED : டிச 26, 2024 02:16 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க., அரசைக் கண்டித்து வரும் 27ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அ.தி.மு.க., சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., அரசு பதவியேற்ற நாள்முதலே, தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள், வயதானோர் உள்ளிட்ட பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு சட்டம்-ஒழுங்கு அடியோடு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. கடந்த 23ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழகத்தில் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது.

பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில்கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதோடு, கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை விடியா தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை, குறிப்பாக பாலியல் குற்றச் செயல்கள் பற்றி, நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் தி.மு.க., அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தும், அதைத் தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக, தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை நாளிதழ்களும், ஊடகங்களும் தினசரி நிகழ்வுகளாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை. அதே போல், இந்த அலங்கோல ஆட்சியில், வியாபாரிகள் தங்களது வணிகத்தை சுதந்திரமாக நடத்த முடியாத நிலை; ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்; தி.மு.க.,வினர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது. ஆளும் தி.மு.க.,வினரால் சினிமா துறை கபளீகரம்; ரியல் எஸ்டேட் தொழில்களில் அதிகாரம் செலுத்துவது என பல்வேறு மக்கள் விரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியாளர்களால் மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஸ்டாலினின் தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கும் பதில் நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us