அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ADDED : நவ 08, 2025 01:35 AM
சிவகாசி: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது, என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருத்தங்கலில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருத்தங்கலில் உள்ள கட்சி அலுவலகத்தில் 2026 சட்டசபை தேர்தல் களப்பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, நிர்வாகிகள் அனைவரும் மக்கள் மத்தியில் தினசரி பணி செய்ய வேண்டும். கட்சிப்பணியில் யாரும் அலட்சியமாக இருக்கக் கூடாது.
பணி செய்ய முடியாவிட்டால் பொறுப்பில் இருந்து விலகி விடுங்கள் அல்லது நீக்கப்படுவீர்கள். என் மீது தவறு இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள்.
கட்சிக்காக உழைப்பவர்களை என்றும் கைவிட மாட்டேன். நமக்கு தொழில் அரசியல் தான்.
அதனை சரியாக செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் தொகுதியிலும் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது. நாம் நிச்சயமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

