ADDED : ஏப் 14, 2024 10:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மார்ச் 26ம் தேதி கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுரு வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக பேசிய பேச்சுகள் சர்ச்சையானது. இது தொடர்பாக முல்லைவாடி வி.ஏ.ஓ., கோபிநாத், ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வீடியோ குறித்து, நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று ஆத்தூர் டவுன் போலீசார், அதிமுக வேட்பாளர் குமரகுரு மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

