தொழில் துறை பிரச்னைகளுக்கு அ.தி.மு.க., குரல் தர கோரிக்கை
தொழில் துறை பிரச்னைகளுக்கு அ.தி.மு.க., குரல் தர கோரிக்கை
ADDED : ஜன 08, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'தொழில் துறையினர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, அ.தி.மு.க., குரல் கொடுக்க வேண்டும்' என, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, அனைத்து தமிழக தொழில்முனைவோர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் ஜெயபால், மண்டல தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் சென்னையில் நேற்று சந்தித்தனர்.
அப்போது, '18 சதவீத வரி, மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குப்பை கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்காக குரல் கொடுக்க வேண்டும்.
'இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.
சோலார் மின்சாரத்திற்கு, 'நெட்வொர்க்' கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்' என, பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.

