sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூடியது அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம்; 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

/

கூடியது அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம்; 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கூடியது அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம்; 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கூடியது அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம்; 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

20


UPDATED : டிச 15, 2024 11:52 AM

ADDED : டிச 15, 2024 11:33 AM

Google News

UPDATED : டிச 15, 2024 11:52 AM ADDED : டிச 15, 2024 11:33 AM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், அ.தி.மு.க., பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அனைத்து முன்னணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் என்னென்ன?

* பெஞ்சல் புயலில் சரியாக செயல்படாத தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானம்.

* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* டங்ஸ்டன் சுரங்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தீர்மானம்.

* திருக்குறளை மத்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

* மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம்.

* பார்முலா 4 பந்தயம், பேனா நினைவு சின்னம் உள்ளிட்டவற்றிற்காக நிதியை வீணடிக்கும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* கோதாவரி - காவிரி, பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய, தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* நீட் தேர்வு ரத்து குறித்து நாடகமாடும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரி செய்து, நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் கமிஷனுக்கு வலியுறுத்தி தீர்மானம்

* ஜாதிவாரி கணக்கெடுப்பை தி.மு.க., அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

* இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க, மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.

* தமிழகத்திற்கு நிதி பகிர்வை பாரபட்சமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்

* 2026ல் இ.பி.எஸ்.,ஐ மீண்டும் முதல்வராக்குவோம் என தீர்மானம்.

கூட்டத்தில், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி, உள்ளாட்சி தேர்தல், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தலை நடத்துவது பற்றி பொதுக்குழுவில் முக்கிய ஆலோசனை செய்யப்பட உள்ளன. அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னைக்கு தீர்வு காண, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us