அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் திறமையானவர்கள்: வேலு
அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் திறமையானவர்கள்: வேலு
ADDED : நவ 13, 2025 01:52 AM
மதுரை: 'திறமையானவர்களை முதல்வர் பயன்படுத்திக் கொள்வதால் தான், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு, தி.மு.க.,வில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு லஞ்சம், கமிஷன் இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை. தவறு இருப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுத்து, பலரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்திருக்கிறோம்.
முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் 20,000த்திற்கும் மேற்பட்ட கள்ள ஓட்டுகள் இருப்பதாக கூறும் எதிர்க்கட்சியினர் அனைவரும், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரா? வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியை ஆதரிக்கும் பழனிசாமி, மத்திய அரசுக்கு ஊது குழல்.
தமிழகத்தில் அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பொறுப்பும், முக்கிய துறைகளும் கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
நான், சேகர்பாபு, ரகுபதி, முத்துசாமி உள்ளிட்டோரை மனதில் வைத்து அப்படி சொல்கின்றனர். யாருக்கு திறமை இருக்கிறதோ, அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
திறமையானவர்களை முதல்வர் பயன்படுத்தி கொள்வதால் தான், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க.,விலேயே இருந்து திறமையாக செயல்பட்டோருக்கும் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

