மூன்றாவது நாளாக கருப்பு உடையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்
மூன்றாவது நாளாக கருப்பு உடையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : ஜன 10, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மூன்றாவது நாளாக கருப்பு உடை அணிந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 'யார் அந்த சார்' என்ற வாசகம் இடம்பெற்ற 'பேட்ஜ்' அணிந்து வந்தனர். இரண்டாவது நாளில், கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
மூன்றாவது நாள், கருப்பு சட்டை, பேட்ஜ் மட்டுமின்றி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி, முகக்கவசம் அணிந்து வந்தனர். நான்காவது நாளான, நேற்று கருப்பு சட்டையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். பெண் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பு சேலை மற்றும் 'பேட்ஜ்' அணிந்திருந்தனர்.

