ADDED : செப் 02, 2025 01:35 AM
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நாஞ்சில் வின்சென்ட், அக்கட்சியின் அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க., அமைப்பு செயலராக, முன்னாள் துணை அமைச்சர், முன்னாள் எம்.பி., நாஞ்சில் வின்சென்ட் நியமிக்கப் படுகிறார்' என அறிவித்துள்ளார்.
பொறியியல் கல்லுாரி, பள்ளி என கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் நாஞ்சில் வின்சென்ட், கடந்த 1977 மற்றும் 1980 சட்டசபை தேர்தல்களில், நாகர்கோவில் தொகுதியில் வென்றவர்.
நாகர்கோவிலின் முதல் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். 1986 - 1992 வரை அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க.,வை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலருமான தளவாய் சுந்தரம், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
அம்மாவட்டத்தில் கோஷ்டி பூசல் இருக்கும் நிலையில், தளவாய் சுந்தரத்தின் பரிந்துரையில், அவரது ஆதரவாளரான வின்சென்டுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.