ADDED : ஆக 11, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
அ.தி.மு.க., ஆட்சியில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாமல், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட்டது.
இதன் காரணமாக, மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்து வந்தனர். தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தவறியதன் காரணமாக, கொலைகள் அதிகரித்து விட்டன.
மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சிவகங்கை ஒன்றியம், மாத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில், தொடர்ந்து மூன்று கொலைகள் கொடூரமான முறையில் நடந்துள்ளன.
இதை கண்டித்தும், கிராம மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், நாளை மறுதினம், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.