அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்
அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்
ADDED : ஜூன் 26, 2025 06:41 PM

திருச்சி: '' பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தி.மு.க., கூட்டணிக்கு பா.ம.க., வரும் போது அது குறித்து பதில் சொல்கிறேன். பா.ஜ., பா.ம.க., இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என நிலையான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறோம். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்து உள்ளது. அதனை ஏன் உடைக்க வேண்டும். இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததால் எங்களுக்கு கசப்பு கிடையாது. அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, நடிகர்கள் கைதானது அதிர்ச்சியான ஒன்று. சினிமா துறையினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இதை தொழிலாக செய்கிறார்கள், வருமானம் தேடுகிறார்கள், நாட்டை பாழாக்குகிறார்கள் என குற்றம் சுமத்த விரும்பவில்லை. நடிகர், நடிகககள் உள்பட புகழ்பெற்றவர்கள் போதைப்பொருளுக்கு ஆளாகி அடிமையாகி சீரழிகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது
மதுக்கடைகளை மூடுவதுடன், போதைப்பொருள் புழக்கத்தையும் தமிழக அரசு தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மதுக்கடைகளை மூடன் வேண்டும் போதைப்பொருள் புழக்கத்தையும் தமிழக அரசு தடுக்க வேண்டும் கடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு என தனிப்படை அமைத்து, கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.