ADDED : டிச 11, 2025 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம், அ.ம.மு.க., ஆகியவற்றை இணைப்பது குறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை முயற்சிகள் எடுத்து வருகிறார். இதற்காக, எங்களோடும் பா.ஜ., தலைமையோடும் அவர் பேசி இருக்கிறார். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.
தி.மு.க., ஆட்சியில் தமிழகம் இன்று பல வழிகளிலும் சீரழிந்து கிடக்கிறது. இந்நிலையில், தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும். அதற்கு, பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும். இதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். பா.ஜ., தலைமையும் இதைத்தான் விரும்புகிறது.
- பன்னீர்செல்வம்
ஒருங்கிணைப்பாளர்,
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்

