'போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தது நாராயணசாமி'
'போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தது நாராயணசாமி'
ADDED : டிச 11, 2025 03:51 AM

புதுச்சேரி: போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்தது, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலத்தில் தான் என, அமைச்சர் நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது:
போலி மருந்து தொழிற்சாலைக்கு, கடந்த 2017ல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி முதல்வராக இருந்தபோது தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் 2027ம் ஆண்டு வரை மருந்து தயாரிக்க அனுமதி பெற்றுஉள்ளது. இந்த போலி மருந்து தொழிற்சாலையை கண்டுபிடித்தது, என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு. கடந்த 2019ல் அரசு மருத்துவமனைக்கு தரமற்ற மருந்துகளை வினியோகம் செய்ததும்,
முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலத்தில்தான். அதை கண்டுபிடித்ததும் எங்கள் அரசுதான். கைது நடவடிக்கை எடுத்துள்ளோம்.
போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் யாரையும் மறைக்கவோ, காப்பாற்ற வேண்டிய அவசியமோ அரசுக்கு இல்லை. அவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட அரசு முடிவு செய்தால், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்க போலீஸ் துறை தயாராக உள்ளது.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உட்பட துறைகளுக்கு போலி மருந்து தொழிற்சாலை தொடர்பான அறிக்கைகளை அனுப்பியுள்ளோம். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்று தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

